இருவேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில், 2 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு ஊரகப் பகுதியான தொட்டசன்னே கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கிரீஷ் (22). இவர் திங்கள்கிழமை காலை காரில் பெங்களூரு-பல்லாரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
ஹுனசேமாரனஹள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புச் சுவரில் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கிரீஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மற்றொரு சம்பவம்: பெங்களூரு ராஜனகுன்டே அத்தநாகனஹள்ளியைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி (58), தையல் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு பணிமுடிந்து, சகோதரியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். பெட்டதலசூரு அருகே பெங்களூரு-பல்லாரி சாலையைக் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நரசிம்மமூர்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இவ்விரு வழக்குகளைப் பதிவு செய்த சிக்கஜாலா போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.