வங்கிகளின் சேவைக்குத் தேவையான நவீன தொழில்நுட்பத்தை உருவாக்க மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று எஸ் வங்கியின் நிதி பிரிவு மூத்தத் தலைவர் ரஜத் மொங்கா தெரிவித்தார்.
பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், வங்கிச் சேவைக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொறியியல் பட்ட மாணவர்களுக்கு பரிசுகளை அளித்து, அவர் பேசியது:-
வங்கிச் சேவைகள் தற்போது கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், ஒரு சில நேரங்களில் கடுமையான பிரச்னைகளைச் சந்திக்க நேரிகிறது. இதனை கருத்தில் கொண்டு, பொறியியல் மாணவர்கள், தனியார் மென்பொறியாளர்களிடையே வங்கிச் சேவையில் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கப் போட்டியை வைத்தோம்.
6 ஆயிரம் பேர் 200 குழுக்களாகப் பிரிந்து 100 நாள்களில் உருவாக்கிய தொழில்நுட்பங்களை டிசம்பர் 23, 24-ஆம் தேதிகளில் காட்சிப்படுத்தினர். இதில் சிறந்து விளங்கிய 10 தொழில்நுட்பங்களை உருவாக்கிய மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.
வங்கிகளின் சேவைக்குத் தேவையான நவீன தொழில்நுட்பத்தை உருவாக்க மாணவர்களுக்கு ஊக்கமளிக்க எஸ் வங்கி உறுதி பூண்டுள்ளது. அடுத்த ஆண்டுகளிலும் இதுபோன்று தொழில்நுட்பங்கள் உருவாக்குவதற்கான போட்டிகள் நடத்தப்படும். சிறந்த வங்கிச் சேவையால் நாட்டின் பொருளாதாரம் உயரும். வங்கிச் சேவையில் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்க எஸ் வங்கி முடிவு செய்துள்ளது என்றார் ரஜத் மொங்கா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 6 - நேரலை!

மோடி குறித்து அண்ணாமலை எழுதியது! வாசித்துக்காட்டிய நயினார் நாகேந்திரன்

இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வானது எப்படி?

பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து உடனே முடிவெடுக்க வேண்டிய அவசரமில்லை! - கேரள அரசு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


