தலித் மாணவர்களின் உயர் கல்விக்கு ஊக்கம்: துணை முதல்வர் பரமேஸ்வர்

கல்விக்கு மாநில அரசு அளித்து வரும் முக்கியத்துவம் காரணமாக தலித், பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளுக்குச்

கல்விக்கு மாநில அரசு அளித்து வரும் முக்கியத்துவம் காரணமாக தலித், பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி படிப்பது எளிதாகியுள்ளது என துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரு விதான செளதாவில் வெள்ளிக்கிழமை பிரபுத்தா திட்டத்தைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: 
தலித், பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி கற்பது எளிதானது அல்ல. குடும்பச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்கள் உயர் கல்விப் படிக்க முடியாத சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, சமூக நலத் துறை அமைச்சரும், இளைஞருமான பிரியங்க்கார்கே "பிரபுத்தா' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் தலித், பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி படிப்பது எளிதாகியுள்ளது. 1970-ஆம் ஆண்டு உயர்கல்வி படிக்க ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது, எனக்கும் மத்திய அரசின் கல்வி உதவித் திட்டம் கைக்கொடுத்தது. தற்போது மாநில அரசே தலித், பழங்குடியின மாணவர்களுக்கான திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளதால், வெளிநாடுகளுக்கு உயர் கல்வி பயிலச் செல்வது என்பது எளிதாகியுள்ளது. 
தலித், பழங்குடியின மாணவர்கள் பொருளாதார சூழலால் உயர்கல்வி படிக்க முடியவில்லை என்றால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு மாநில அரசு இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. கல்விதான் தங்களின் எதிர்காலம் என்பதை தலித், பழங்குடியின மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மாணவர்களும் உணர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் பிரியங்க் கார்கே, சமூக நலத் துறை ஆலோசகர் வெங்கடய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com