Enable Javscript for better performance
உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு: பெங்களூரில் கோலாகலமாக தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு: பெங்களூரில் கோலாகலமாக தொடக்கம்

    By DIN  |   Published on : 16th June 2018 11:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரில் சனிக்கிழமை 13-ஆவது உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு கோலாகலமாக தொடங்கியது.
    மலேசியாவை தலைமையிடமாக கொண்டுள்ள உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13-ஆவது உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, பெங்களூரில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது.
    உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் கர்நாடக கிளையின் சார்பில்,  அதன் பொதுச் செயலர் சு.சுந்தரவேலு தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டை, பாஜக முன்னாள் அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தொடக்கி வைத்தார்.  விழாவில், இயக்கத் தலைவர் மலேசியா ப.கு.சண்முகம், ஆசிய ஒன்றிய மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் இரா.மதிவாணன், பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன்,  இயக்கத்தின் தென்ஆப்ரிக்க கிளைத் தலைவர் மிக்கிசெட்டி,  அமெரிக்க கிளைத் தலைவர் வேல்.வேலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் மு.நித்தியகல்யாணி தலைமையில் ஆய்வரங்கம் நடைபெற்றது.  இதில் அமலன் ஜெரோம், எஸ்.ராஜசேகரன்,  சு.வசந்தா, சித்ரகலா கலைச்செல்வன் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.  
    வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மொழிகள் புல முதன்மையர் ப.மகாலிங்கம் தலைமையில் "தமிழரின் வாழ்வியல் விழுமியங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் மு.மீனாட்சிசுந்தரம், து.மனோகர், க.அரசு, பா.பானுமதி, கடவூர் மணிமாறன்,  லலிதா சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.
         இலங்கை மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்நேசன் அடிகளார் சிறப்புரை ஆற்றினார்.  வெற்றியழகன் தலைமையில் "சங்க கால தமிழ்ப் பண்பாடு' என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் சர்தார் சிங், மருது, எழிலன், பட்டுராசபாரதி,  போர்முரசு கதிரவன்,  கே.சி.சேகர், பா.மூர்த்தி, மதுரகவி, இலாலா லஜபதி, கல்யாண்குமார் உள்ளிட்டோர் கவிதை பாடினர்.
    தொடர்ந்து நடைபெற்ற கலையரங்கில் தமிழ்க் கலைகளான பறையாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ராஜாராணி ஆட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், காளியாட்டம் போன்றவை இடம்பெற்றன.
    தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்காக ஐ.உலகநாதன் (பெங்களூரு),  உதயன் துரைராஜா (கனடா), சி.பூ.மணி (பெங்களூரு),  கரு.நாகராசன் (சென்னை),  தர்மகுமாரி முத்துக்குமாரசாமி (தென் ஆப்ரிக்கா),  கி.சு.தென்னவன் (பெங்களூரு) ஆகியோருக்கு தமிழ்ப் பண்பாட்டு காவலர் விருதுகள் வழங்கப்பட்டன.  இந்த விருதுகளை அளித்து, மாநாட்டு சிறப்பு மலர் வெளியிட்டு, பெங்களூரு மாநகராட்சி மேயர் ஆர்.சம்பத்ராஜ் சிறப்புரையாற்றினார்.  இந்த விழாவில், எம்ஜிஆர் மணி, எஸ்.சுந்தரவேலு, மிக்கிசெட்டி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai