அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: டாக்டர் அம்பேத்கரின் பெயரன் பிரகாஷ் அம்பேத்கர்

அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரன் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரன் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்தார்.
கர்நாடக மதச்சார்பின்மை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூரு சங்கொல்லி ராயண்ணா 
ரயில் நிலையத்திலிருந்து சுதந்திரப் பூங்கா வரை புதன்கிழமை அரசியலமைப்புச்சட்டம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்போம் ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: 
இந்தியாவின் தலைசிறந்த புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் தத்துவங்கள், கொள்கைகளை ஆண்டாண்டு காலமாக எதிர்த்து வந்த சில அமைப்புகள், அரசியல் கட்சிகள் தற்போது அவரை புகழ்ந்து நாடகமாடி வருகின்றன. 
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஒன்று திரண்டால் மட்டுமே அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இயலும். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் உருவாக்கி தந்துள்ள அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க ஒருசில சுயநல கட்சிகள் முற்பட்டுள்ளன. 
சமத்துவத்தை விரும்பும் மக்கள் டாக்டர் அம்பேத்கர் வகுத்தளித்துள்ள அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வளர்ச்சி என்ற போர்வையில் ஹிந்து நாட்டை அமைக்க வேண்டும் என்பதே ஒருசில மதவாத கட்சியின் மறைமுக நோக்கமாகும். அதற்காக மக்களை திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். 
டாக்டர் அம்பேத்கர் சமத்துவ சமுதாயத்தை படைப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்தார். அவரது கனவை சிதைக்க அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற முற்பட்டுள்ளனர். மதச்சார்பற்ற கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகளால் மதவாத கட்சிகள் கோலோச்சும் நிலை உருவாகிவிட்டது. 
அதன்விளைவாக அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆபத்து நேர்ந்துள்ளது. இதை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்க வேண்டும் என்றார். ஊர்வலத்தில் கூட்டமைப்பின் தலைவர் மோகன்ராஜ், முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீராமரெட்டி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com