Enable Javscript for better performance
நாளை இலவச நீரிழிவு நோய் பரிசோதனை- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இலவச நீரிழிவு நோய் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
    இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
    டாக்டர் மோகன்ஸ் நீரிழிவுநோய் சிகிச்சை மையம் மற்றும் பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பெங்களூரு தமிழ்ச் சங்க வளாகத்தில் மார்ச் 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இலவச நீரிழிவுநோய் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
    அதிக அளவில் சிறுநீர் கழித்தல், அதிகமாக உணவு உட்கொள்ளுதல், அதிகமாக குடிநீர் அருந்துவது, உடல் பலவீனம், உடல் அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் அவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080-43968888 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பேருந்தில் பயணச்சீட்டு பெறாதவர்களிடம்
    அபராதமாக ரூ.9.40 லட்சம் வசூல்
    பெங்களூரு,மார்ச் 23: பேருந்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் அபராதமாக ரூ.9.40 லட்சம் வசூலிக்கப்பட்டது.
    இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு சோதனை கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்டது. 19,401 நடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக 2,272சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நடத்துநர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டன.
    அதனடிப்படையில், பயணச்சீட்டில்லாமல் பயணித்த 5,733 பேரிடம் ரூ.9,40,590 அபராதமாக வசூலிக்கப்பட்டது. வருவாய் இழப்பு ஏற்படுத்திய ஓட்டுநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்துபயணம் செய்த 361ஆண்பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.36,100 வசூலிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai