Enable Javscript for better performance
பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு தமிழக அரசின் தமிழ்த் தாய் விருது- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு தமிழக அரசின் தமிழ்த் தாய் விருது

    By DIN  |   Published on : 24th March 2018 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் நிகழ் ஆண்டுக்கான தமிழ்த் தாய் விருதுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் நிகழ் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருதுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான விழா ஏப்ரல் 4-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
    கலை, இலக்கியப் பணிகள் தவிர தமிழ், தமிழர் நலன்காக்க கடந்த 65 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் பெங்களூரு தமிழ்ச் சங்கம், உலகத்தமிழர்களின் பாலமாக விளங்கிவருகிறது. கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும், தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், அமைச்சர்கள், ஆளுநர்கள், நீதியரசர்கள், துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் சங்கத்திற்கு வருகை புரிந்துள்ள சிறப்புகுரியது பெங்களூரு தமிழ்ச் சங்கம் ஆகும்.
    தமிழக அரசு தமிழ்த் தாய் விருது வழங்கி கெளரவிக்க இருப்பது கர்நாடகத் தமிழர்களுக்கு கிடைத்த பெருமதிப்பாகும்.
    பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை தமிழ்த்தாய் விருதுக்கு தேர்ந்தெடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai