Enable Javscript for better performance
பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் 3 இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
    பெங்களூரு நாகர்பாவி 11-ஆவது பிளாக்கைச் சேர்ந்தவர் சிவநஞ்சம்மா. இவர் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் வீட்டின் அருகே நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்திலிருந்த ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 40 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து அன்னபூர்ணேஸ்வரிநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
    பனசங்கரி 6-ஆவது பிளாக் 9-ஆவது முக்கியச் சாலையைச் சேர்ந்தவர் இன்சரா. இவர் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சின்மயா பள்ளி அருகே நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், அவரது கழுத்திலிருந்த ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள 25 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து கெங்கேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    ஜே.பி.நகர் டாலர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சகுந்தலா. இவர் வெள்ளிக்கிழமை காலை அதே பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்திலிருந்த ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள 30 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து புட்டனஹள்ளி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai