Enable Javscript for better performance
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சைக்கிளில் சென்றவர் இளைஞர் உயிரிழந்தார்.
    மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுமித் (25). இவர் பெங்களூரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்த சுமித் மீது சிஎம்டி சதுக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. காயமடைந்த சுமித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அசோக்நகர் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai