Enable Javscript for better performance
எஸ்எஸ்எல்சிவினா- விடைகள் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் இதுவரை நடைபெற்றுள்ள தேர்வுகளுக்கான விடைகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
    இதுகுறித்து கர்நாடக உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.)வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
    கர்நாடக உயர் நிலைக் கல்வி தேர்வு வாரியம் சார்பில் (கேஎஸ்இஇபி) 2017-18-ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் முதல்மொழி, இரண்டாம்மொழி, கணிதம் பாடத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. இந்த பாடங்களுக்கான தேர்வில் இடம்பெற்ற வினாத்தாள்களுக்கான மாதிரி விடைகள் மாணவர்கள் சரிபார்த்து கொள்வதற்காக h‌t‌t‌p://‌w‌w‌w.‌k‌s‌e‌e​b.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n  என்ற இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. இதில் தவறு ஏதுமிருந்தால், அது குறித்து ஏப்.2-ஆம் தேதிக்குள் பெற்றோர்கள், மாணவர்கள் ஆட்சேபணைகளை இணையதளத்தில் விளக்கங்களுடன் பதிவு செய்யலாம்.
    ஆட்சேபணைகளைத் தெரிவிக்கும் போது பாடம், வினாத்தாள் வகை, வினா எண்களை தெளிவாக குறிப்பிட கேட்டுக் கொள்கிறோம். சரியான விளக்கம் அளிக்காத ஆட்சேபணைகள் நிராகரிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai