Enable Javscript for better performance
ஏப்.16 முதல் அறிவியல் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் ஏப்.16-ஆம் தேதி முதல் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் நடைபெறவிருக்கிறது.
    இதுகுறித்து விஸ்வேஷ்வரையா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    விஸ்வேஷ்வரையா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் சார்பில் கலை, அறிவியல், வேதியியல், மின்னணுவியல், கணிதம், இயற்பியல், ரோபோட்டிக்ஸ் சார்ந்த கோடைகால அறிவியல் பயிற்சிமுகாம் ஏப்.16 முதல் ஏப்.27-ஆம் தேதி வரை மற்றும் மே 7 முதல் மே 18-ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.
    2017-18-ஆம் கல்வியாண்டில் 5 முதல் 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். இதில் அறிவியல் தொடர்பான செய்முறை பயிற்சிகள் அளிக்கப்படும்.
    பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அருங்காட்சியகத்தின் வரவேற்பு முகப்பிலும் ‌w‌w‌w.‌v‌i‌s‌m‌u‌s‌e‌u‌m.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களை முறையே ஏப்.10 மற்றும் ஏப்.30-ஆம் தேதிக்குள் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கலாம்.
    மேலும் விவரங்களுக்கு 080-22040224, 22040228 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai