Enable Javscript for better performance
கர்நாடக தலைமைச் செயலாளர் ரத்னபிரபாவுக்கு பணி நீட்டிப்பு: மத்திய அரசு அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக தலைமைச் செயலாளர் ரத்னபிரபாவுக்கு பணி நீட்டிப்பு: மத்திய அரசு அனுமதி

    By DIN  |   Published on : 31st March 2018 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக மாநில தலைமைச் செயலாளரின் பணிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
    கர்நாடக மாநில கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ரத்னபிரபா, கடந்தாண்டு நவ.30-ஆம் தேதி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1981-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவரது பணிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 
    இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதையொட்டி தலைமைச் செயலாளர் பதவியில் மேலும் 4 மாதங்களுக்கு ரத்னபிரபா நீடிக்க அனுமதிக் கோரி கர்நாடக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. 
    இக்கடிதத்தை பரிசீலித்த மத்திய அரசு, மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தலைமைச் செயலாளர் ரத்னபிரபாவின் பணிக்காலத்தை 3 மாதங்களுக்கு அதாவது ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிக்க அனுமதி அளித்து, உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து, புதிய அரசு பதவியேற்கும் வரை ரத்னபிரபா தலைமைச் செயலாளராகப் பணியில் நீடிப்பார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai