Enable Javscript for better performance
குடகு நகரில் ஆலங்கட்டி மழை- Dinamani

சுடச்சுட

    

    குடகு மாவட்டம், குஷால் நகரில் வெள்ளிக்கிழமை  பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    கடந்த சில நாள்களாக கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. 
    குஷால்நகரில் ஆலங்கட்டியுடன் கூடிய பலத்த மழை அரை மணி நேரம் பெய்தது. இதனால், அம்மாவட்டத்தில் வெப்பம் ஓரளவு தணிந்தது. பெங்களூரு உள்ளிட்ட ஊரகத்தில் மாலை 5.30 மணி அளவில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் மல்லேஸ்வரம் பாஜக அலுவலகத்தின் அருகே மரம் வேரோடு சாய்ந்தது. 
    பெங்களூரு ஊரகம் ஹெசரகட்டா அருகே சூறைகாற்றுடன் பெய்த பலத்த மழையால் 10 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளிக்கிழமை பிற்பகல் பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் பலமாக வீசிய சூறைக்காற்றால் நடந்து சென்றவர்கள் மட்டுமன்றி, இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai