Enable Javscript for better performance
சித்தராமையாவுக்கு தோல்வி பயம்: பாஜக- Dinamani

சுடச்சுட

    

    சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் சித்தராமையா தோல்வி பயத்தில் உள்ளதாக பாஜக மூத்த தலைவரும், சட்ட மேலவை எதிர்கட்சித் தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
    கலபுர்கியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவில் ஒருசிலர் இணைந்து வருகின்றனர். இதனால், முதல்வர் சித்தராமையாவுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது. 
    காங்கிரஸ் கட்சிதான் பாஜகவின் முதல் எதிரி. அக் கட்சியை தோற்கடிக்கும் எண்ணத்தோடு பாஜகவில் யார் இணைந்தாலும் அவர்களை வரவேற்போம். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவை சித்தராமையா கடுமையாக விமர்சித்து வருகிறார். 
    தலித், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் ஆதரவாளர் எனக் கூறிக்கொள்ளும் முதல்வர் சித்தராமையா அந்த மக்களின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை. முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவுடன் விரோதம் பாராட்டி , காங்கிரஸ் கட்சியில் இணைந்த சித்தராமையா, அக் கட்சியின் மூத்த தலைவர்களான எச்.விஸ்வநாத், சீனிவாஸ் பிரசாத் ஆகியோரை கட்சியை விட்டு விலகச் செய்தார். 
    தேர்தலுக்குப் பிறகு சித்தராமையாவுக்கும் அதே நிலைமை வரும். அப்போது காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா ஒதுக்கப்படுவார் என்றார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai