Enable Javscript for better performance
தவறான செய்தி பதிவேற்றம்: இணையதள உரிமையாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தவறான செய்தியைப் பதிவேற்றம் செய்த வழக்கில் செய்தி இணையதள உரிமையாளர் மகேஷ் ஹெக்டே கைது செய்யப்பட்டார்.
    போஸ்ட் கார்ட் டாட் நியூஸ் என்ற செய்தி இணையதளத்தை நடத்திவருபவர் மகேஷ் விக்ரம் ஹெக்டே. இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது இணையதளத்தில்  "நஞ்சன்கூடு அருகே சமணத் துறவி முஸ்லிம் இளைஞரால் தாக்கப்பட்டுள்ளார். 
    முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக இல்லை' என்ற காணொலியைப் பதிவேற்றம் செய்திருந்தார். இதை 6 ஆயிரம் பேர் மறு பதிவு செய்துள்ளனர்.
    இதுதொடர்பாக பெங்களூரு ஒயிட்பீல்டை சேர்ந்த கஃபார்பெய்க் (48), குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த மத்திய சைபர் குற்றப் பிரிவு போலீஸார், மகேஷ் ஹெக்டேவைக் கைது செய்தனர். மேலும், இந்த புகாரில் தலைமறைவாக உள்ள இணையதள மேலாளர்கள் கெளரவ் பிரதான், தீபக் ஷெட்டியை போலீஸார் தேடி வருகின்றனர். 
    சமணத் துறவி உபாத்யே மாயங்க்சாகர் கடந்த மார்ச் 11-ஆம் தேதி நிகழ்ந்த ஒரு விபத்தில் காயம் ஏற்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை முஸ்லிம் இளைஞர் தாக்கியதாகவும், சித்தராமையாவின் ஆட்சியில் கர்நாடகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தனது இணையதளத்தில் மகேஷ் ஹெக்டே  தவறாகப் பதிவு செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai