Enable Javscript for better performance
நேரு கோளரங்கத்தில் கூடுதல் அறிவியல் காட்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் கூடுதல் அறிவியல் காட்சி திரையிடப்படுகிறது.
    இதுகுறித்து கோளரங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் டி.செளடையா சாலையில் அமைந்துள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் கோடைகாலத்தில் மக்கள் கண்டுகளிப்பதற்காக கூடுதல் அறிவியல் காட்சிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 
    ஏப்.1-ஆம் தேதி முதல் பிரபஞ்சத்தை அறிந்து கொள்வோம் என்ற அறிவியல் காட்சி திரையிடப்படுகிறது. இது கன்னடத்தில் பிற்பகல் 3.30 மணிமற்றும் ஆங்கிலத்தில் மாலை 4.30 மணி, மாலை 5.30மணிக்கு  திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. 
    இதேபோல, நமது சூரிய குடும்பம் என்ற அறிவியல் காட்சி, கன்னடத்தில் பிற்பகல் 2.30 மணி, ஆங்கிலத்தில் நண்பகல் 12.30 மணிக்கு திரையிடப்படுகிறது. இந்த காட்சிகளை ஒருசமயத்தில் 210 பேர் அமர்ந்து காணலாம். பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்ள விரும்பினால், கோளரங்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவுக்கு w‌w‌w.‌t​a‌r​a‌l​a‌y​a.‌o‌r‌g என்ற இணையதளத்திலோ அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai