Enable Javscript for better performance
ப்ரேக்த்ரூ அறிவியல் சங்கஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் ஏப்.14-ஆம் தேதி "அறிவியலுக்காக நடைபோடுவோம் இந்தியா' ஊர்வலம் நடக்கவிருக்கிறது.
    இதுகுறித்து ப்ரேக்த்ரூ அறிவியல் சங்கத்தின் கர்நாடக மாநில செயலாளர் கே.எஸ்.ரஜனி வெளியிட்ட அறிக்கை:
    கடந்தாண்டு ஆக.9-ஆம் தேதி அறிவியலுக்காக நடைபோடும் இந்தியா ஊர்வலத்தை நடத்தியிருந்தோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்புகிடைத்தது. இதைத் தொடர்ந்து, கல்வி மற்றும் அறிவியல்துறைக்கு கூடுதல் நிதி வேண்டுமென்று கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினோம். மூடநம்பிக்கை மற்றும் போலி அறிவியலுக்கு எதிராக இந்தியா என்ற முழக்கத்துடன் தேசிய அறிவியல் தினத்தை வெகுசிறப்பாகக் கொண்டாடினோம். பள்ளி, கல்லூரிகளில் டார்வின் தின விழாவை நடத்தினோம். இதைத் தொடர்ந்து, பெங்களூரில் வருகிற ஏப்.14-ஆம் தேதி அறிவியலுக்காக நடைபோடுவோம் இந்தியா ஊர்வலத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.  இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு  ‌w‌w‌w.‌m​a‌r​c‌h‌f‌o‌r‌s​c‌i‌e‌n​c‌e.​c‌o‌m என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai