Enable Javscript for better performance
மோடியின் ஆட்சியில் வங்கி மோசடிகள் அதிகரிப்பு: ரனதீப்சிங் சுர்ஜேவாலா- Dinamani

சுடச்சுட

    

    மோடியின் ஆட்சியில் வங்கி மோசடிகள் அதிகரிப்பு: ரனதீப்சிங் சுர்ஜேவாலா

    By DIN  |   Published on : 31st March 2018 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமர் மோடியின் ஆட்சியில் வங்கி மோசடிகள் அதிகரித்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஊடகப் பிரிவுத் தலைவர் ரனதீப்சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
    இதுகுறித்து பெங்களூரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
    நமது நாட்டில் தினமும் ஏதாவதொரு வங்கி மோசடிகள் பகிரங்கமாகி வருகின்றன. வங்கித் துறை மிகவும் ஆபத்தான நிலையை அடைந்துவிட்டது. இந்த நிலையிலும், வங்கி மோசடிகள் குறித்து பிரதமர் மோடி, மத்திய நிதித் துறை அமைச்சர் அருண்ஜேட்லி ஆகிய இருவரும் மெளனம் காத்துவருகின்றனர்.
    பிரதமர் மோடியின் ஆட்சியில் வங்கி மோசடிகள் அதிகரித்துள்ளன. வங்கி மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் நாட்டைவிட்டு தப்பிக்க பிரதமர் மோடி அரசின் ஒத்துழைப்பே காரணம். சாதாரண மக்கள் வங்கி மீது வைத்திருக்கும் நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளன.  சாதாரண மக்கள் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாவிடில் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. ஆனால், விஜய் மல்லையா,லலித் மோடி, நீரவ்மோடி, மெகுல்ஜோக்சி, ஜத்தின்மேக்தா போன்றோர் வெளிநாட்டுக்கு தப்பிக்க மத்திய பாஜக அரசு துணை செல்கிறது. 
    விஜய் மல்லையா, லலித்மோடி, நீரவ்மோடி, கனிஷ்க் ஜுவெல்லர்ஸ் உள்ளிட்ட 11 மிகப்பெரிய வணிகர்கள் வங்கியை மோசடி செய்துள்ளனர். இவர்களால் வங்கிப் பணம் ரூ.61,036 கோடிக்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய மோசடி நடந்திருந்தாலும், பிரதமர் மோடி வாய்த்திறக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.  
    தற்போது கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, அக் கட்சியின் தேசியத் தலைவராகப் பதவியேற்ற பிறகு அவரது சொத்து பன்மடங்கு உயர்ந்துள்ளது என்றார். உடன், ஊடகப்பிரிவு அமைப்பாளர் பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் மாநில செயல்தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai