Enable Javscript for better performance
ராகுல் சுற்றுப்பயணம் ஏப்.7-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியின் சுற்றுப்பயணம் ஏப்.7-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து கோலாரில் வெள்ளிக்கிழமை கோலார் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சந்திரரெட்டி, செய்தியாளர்களிடம் கூறியது: 
    ராகுல் காந்தி ஏப்.4-ஆம் தேதி முதல் கோலார் மற்றும் சிக்பளாப்பூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சுற்றுப்பயணம் ஏப்.7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, கட்சியின் மேலிடப்பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், முதல்வர் சித்தராமையா, கர்நாடகமாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா உள்ளிட்டமூத்த தலைவர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். ஏப்.7-ஆம் தேதி முல்பாகலில் உள்ள குடலமலை ஸ்ரீவிநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து ராகுல் காந்தி தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். 
    கர்நாடகத்தின் முதல் முதலமைச்சரான கே.சி.ரெட்டியின் வீட்டுக்குச் செல்லும் ராகுல் காந்தி, கோலார்தங்கவயலில் உள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர், பங்கார்பேட், மாலூர், வேம்கல், சிட்லகட்டா வழியாக பேருந்தில் பயணம் செய்து மக்களைச் சந்திக்கிறார். அதன்பிறகு சிக்பளாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் என்றார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai