Enable Javscript for better performance
ராணுவர் வீரர் கொலை: சக வீரர்கள் 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ராணுவர் வீரர் கொலை வழக்கில் சக வீரர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பங்கஜ்குமார் (26). இவர் பெங்களூரு தொம்மலூர் ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். இவருடன் பணிபுரிந்து வந்த ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த தன்ராஜ் (25), முரளிகிருஷ்ணா (29)ஆகியோருக்கும் பங்கஜ்குமாருக்கும் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. 
    இந்த நிலையில், கடந்த மார்ச் 23-ஆம் தேதி இரவு பயிற்சி அறையில் தூங்கிக் கொண்டிருந்த பங்கஜ்குமாரை, தன்ராஜ், முரளிகிருஷ்ணா ஆகியோர் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். பின்னர் சடலத்தை டேங்கர் வாகனத்தில் கொண்டு சென்று, கோல்ஃப் மைதானத்தில் எரிக்க முயன்றனர். பாதி எரிந்த நிலையில் சடலத்தை மீண்டும் வாகனத்தில் எடுத்து வந்து, முகாமின் மூலையில் கிடத்தி, குப்பையைப் போட்டு மூடியுள்ளனர். 
    பங்கஜ் குமார் காணாமல் போனதையடுத்து, ராணுவ அதிகாரிகள் விவேக்நகர் போலீஸில் புகார் அளித்தனர். புகாரைப் பதிந்த போலீஸார், தன்ராஜ், முரளிகிருஷ்ணாவைக் கைது செய்தனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக பங்கஜ்குமாரைக் கொலை செய்ததாகத் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai