Enable Javscript for better performance
வரும் மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    வரும் மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் போட்டி

    By DIN  |   Published on : 31st March 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் ரேவண்ணா மகன் பிரஜ்வல் (தேவெ கெளடாவின் பெயரன்) போட்டியிடுவார் என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
    ஹாசனில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வரும் மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் நான் (தேவெ கெளடா) போட்டியிட மாட்டேன். ஒருவேளை தேர்தலில் போட்டியிட்டால், வெற்றி பெற்று சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, அந்தத் தொகுதியிலிருந்து மஜத கட்சியைச் சேர்ந்த வேறு யாராவது போட்டியிட கட்சி நிர்வாகிகளை வலியுறுத்துவேன். 
    அல்லது எனது மகன் ரேவண்ணாவின் புதல்வர் பிரஜ்வல் போட்டியிடச் செய்து, அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்பது எனது ஆசையாக உள்ளது. இதனால்,  சட்டப்பேரவைத் தேர்தலில் பிரஜ்வல் போட்டியிட மாட்டார். 
    பணிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ள கர்நாடக தலைமைச் செயலாளர் ரத்ன பிரபா, பேரவைத் தேர்தலில் பாராபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். இனி தேர்தலில் போட்டியிடுவதில்லை என கடந்த பேரவைத் தேர்தலின் போது தெரிவித்த முதல்வர் சித்தராமையா, மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது மட்டுமன்றி, இதுவே இறுதித் தேர்தல் எனவும் கூறி வருகிறார். அவரது பேச்சை யாரும் பொருள்படுத்தத் தேவையில்லை என்றார் தேவெ கெளடா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai