Enable Javscript for better performance
2 குழந்தைளுடன் தாய் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    குடும்பப் பிரச்னை காரணமாக தனது 2 குழந்தைகளுடன் தூக்கிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். 
    மண்டியா மாவட்டம், குலகட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி சுனிதா (35). இவர்கள் குழந்தைகள் பிரியங்கா (15), பிரஜ்வல் (12). சுனிதா அதே கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவருக்கு கடன் கொடுத்திருந்தாராம். 
    ஆனால், பணத்தை திருப்பித் தராமல் மோகன் ஏமாற்றி வந்தாராம். இதுதொடர்பாக சுனிதாவுக்கும் அவரது கணவர் ஜெகதீஷுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை தனது 2 குழந்தைகளுடன் சுனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
    இதுகுறித்து மளவள்ளி ஊரக போலீஸார் வழக்குப் பதிந்து ஜெகதீஷ், மோகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai