Enable Javscript for better performance
எடியூரப்பாவால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இயலாது: சித்தராமையா- Dinamani

சுடச்சுட

    

    எடியூரப்பாவால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இயலாது: சித்தராமையா

    By DIN  |   Published on : 18th May 2018 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் எடியூரப்பாவால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இயலாது என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
    இதுகுறித்து பெங்களூரு விதான செளதாவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பாஜகவால் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பே இல்லை. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றிருக்கலாம். ஆனால், சட்டப்பேரவையில் எடியூரப்பாவால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இயலாது. இதனால் எடியூரப்பா தனது ஆட்சியை இழக்க நேரிடும். எடியூரப்பா அகந்தையோடு நடந்துகொள்ள முயல்கிறார். இது நீண்ட நாள்களுக்கு எடுபடாது.
    ஆளுநர் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக காங்கிரஸ் மேலிடம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது நல்ல முடிவாகும். என்னுடைய கணிப்புப்படி, கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை இழக்க நேரிடும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai