Enable Javscript for better performance
ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ஒருங்கிணைந்த எம்ஏ(பிரெஞ்சு) பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகத்தில் உலகமொழிகள் மையத்தின் சார்பில் பிஏ(பிரெஞ்சு), எம்ஏ(பிரெஞ்சு)பட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்ஏ(பிரெஞ்சு)முதுநிலைப் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
    2-ஆம் ஆண்டு பியூசி தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். விண்ணப்பப் படிவங்களை ‌w‌w‌w.​b​a‌n‌g​a‌l‌o‌r‌e‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.​a​c.‌i‌n  என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 
    விண்ணப்பப் படிவத்தை கட்டணத்திற்கான வரைவோலையுடன் ஒருங்கிணைப்பாளர், பிரெஞ்சு மொழித் துறை, அரண்மனைசாலை, பெங்களூரு பல்கலைக்கழகம், பெங்களூரு-560009 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9972296296 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai