Enable Javscript for better performance
காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஜி.பரமேஸ்வர் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஜி.பரமேஸ்வர் தேர்வு

    By DIN  |   Published on : 18th May 2018 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஜி.பரமேஸ்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    பெங்களூரு அசோக் நட்சத்திர விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி.பரமேஸ்வர் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், ஆர்.வி.தேஷ்பாண்டே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், ஒருசில எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.
    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவராக காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசில் இரண்டாவது பெரியகட்சியாக விளங்கும் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற முடியும். எனவே, ஜி.பரமேஸ்வர் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவிருக்கிறார். இதைத் தொடர்ந்து, கர்நாடக காங்கிரஸ் தலைவராக சித்தராமையா அல்லது டி.கே.சிவக்குமார் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai