Enable Javscript for better performance
சட்டப் போராட்டம் நடத்துவோம்:ஜி.பரமேஸ்வர்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றுள்ளதை எதிர்த்து காங்கிரஸ் சட்டப் போராட்டத்தில் ஈடுபடும் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
    பெங்களூரு விதான செளதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் வியாழக்கிழமை காங்கிரஸ், மஜத கட்சி சார்பில் தர்னா போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
    சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு மஜதவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. இதனால், கூட்டணியின் பலம் 118-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், அதிக அளவில் ஆதரவு பெற்றுள்ள கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல், 104 இடங்களைப் பிடித்துள்ள பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைத்துள்ளார். இதையடுத்து, எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இது ஜனநாயகத்துக்கும், அரசியல் சட்ட விதிமுறைகளுக்கும் எதிரானது. 
    இதை எதிர்த்து காங்கிரஸ் சட்டப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பா தனது பலத்தை நிரூபிக்க ஆளுநர் 15 நாள்கள் கால அவகாசம் அளித்துள்ளார். இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாஜகவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, ஜனநாயகத்தை கேளிக்கூத்தாக்கியுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai