Enable Javscript for better performance
ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் 11-இல் தேர்தல்- Dinamani

சுடச்சுட

    

    பாஜக வேட்பாளர் மறைவையடுத்து ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல், ஜூன் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
    பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த விஜயகுமார், மாரடைப்பால் காலமானார். தேசிய கட்சியின் வேட்பாளர் மறைவையடுத்து, அத்தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜூன் 11-ஆம் தேதியன்று அத்தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 18) முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய மே 25-ஆம் தேதி இறுதி நாளாகும். மே 28-ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். ஜூன் 11-ஆம் தேதி ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும்.
    இதேபோல போலியான வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்ட ராஜராஜேஸ்வரிநகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் மே 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளின் முடிவுகள் ஜூன் 12-ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai