Enable Javscript for better performance
"மக்களவைத் தேர்தலில் 28 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற இலக்கு'- Dinamani

சுடச்சுட

    

    "மக்களவைத் தேர்தலில் 28 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற இலக்கு'

    By DIN  |   Published on : 18th May 2018 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தின் 28 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற இலக்கு நிர்ணயித்து பணியாற்றுவோம் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
    பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியது: தேசிய அளவில் எதிர்பார்பை ஏற்படுத்தி, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆசிர்வாதத்தால் இந்த வெற்றி சாத்தியமானது. பாஜக ஆட்சிக்கு வருவதை பொறுக்க முடியாத, மக்களால் புறக்கணிக்கப்பட்ட 2 கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முயற்சியை மேற்கொள்வதை ஒரு போதும் ஏற்க முடியாது. முதல்வர் பதவியை ஏற்றவுடன் விவசாயிகள் பெற்று தேசிய, கூட்டுறவு வங்கிகளில் பெற்று கடன், நெசவாளர்கள் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்தேன். 
    ஆனால், சில நடைமுறை சிக்கல்களால் அந்த அறிவிப்பு இரண்டொரு நாள்களுக்கு தள்ளி போயியுள்ளது. என்றாலும் கடன் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள்கள் அவகாசம் அளித்துள்ளார். அதற்குள் பெரும்பான்மை நிரூபிப்போம். 
    கேளிக்கை விடுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ், மஜத சட்டப்பேரவை உறுப்பினர்கள் சித்தரவதை அனுவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை நான் வேடிக்கை பார்க்க மாட்டேன். பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் நம் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தின் 28 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற இலக்கை நிர்ணயித்துள்ளோம். அதைச் செயல்படுத்த  பணியாற்றுவோம். இதேபோல ஆசிரியர் தொகுதி சட்ட மேலவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவோம் என்றார்.
    நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், பிரகாஷ் ஜாவடேகர், சதானந்த கெளடா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai