Enable Javscript for better performance
4 ஐ.பி.எஸ். அதிகாரிகள்அதிரடி பணியிடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டதும், 4 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
    இதுகுறித்து அரசு வெளியிட்ட உத்தரவு: பெங்களூரு ரயில்வே துறையில் கூடுதல் டிஜிபி அமர்குமார்பாண்டே, பணியிடமாற்றம் செய்து பெங்களூரு உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநில ஆயுதப் படை துணை ஐஜிபியாக இருக்கும் சந்தீப்பாட்டீல், பெங்களூரில் உள்ள உளவுப்பிரிவு துணை ஐஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    பீதர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.தேவராஜ், பெங்களூரு மாநகர மத்திய மண்டலத்தின் கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பெங்களூரில் உள்ள ஊழல் ஒழிப்புப் படை காவல் கண்காணிப்பாளராக உள்ள எஸ்.கிரீஷ், பெங்களூரு மாநகர வடகிழக்கு மண்டல துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai