பெங்களூரில் செப்.15 முதல் கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்
By DIN | Published on : 12th September 2018 08:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெங்களூரில் செப்.15-ஆம் தேதி முதல் கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநில கால்நடை இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி மையம் வெளியிட்ட
செய்திக் குறிப்பு: பெங்களூரு ஹெசரகட்டாவில் உள்ள மாநில கால்நடை இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி மையத்தில் உள்ள கோழிப் பண்ணையில் செப்.15,22,29 ஆகிய நாள்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை ஒருநாள் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளோர் www.ahvstrg.22.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியாளர்களுக்கு உணவு, சிற்றுண்டு எதுவும் அளிக்கப்பட மாட்டாது. மேலும் பயிற்சியில் பங்கேற்போருக்கு உதவித்தொகை எதுவும் தரப்பட மாட்டாது. இப்பயிற்சியில் நாளொன்றுக்கு 75 பேருக்கும் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் ஆதார் அட்டை மற்றும் 2 கடவுச்சீட்டு புகைப்படத்துடன் பயிற்சியில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-28466397 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.