காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பிரிக்க முடியாது

காங்கிரஸ் எம்எல்ஏக்களை பிரிக்கும் பாஜகவின் முயற்சி பலனளிக்காது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களை பிரிக்கும் பாஜகவின் முயற்சி பலனளிக்காது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியானதால், கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ஆனந்த்சிங், நாகேந்திரா, பிரதாப் கெளடா பாட்டீல், பசனகெளடா உள்ளிட்டோரை கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்துக்கு அழைத்த வந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், செய்தியாளர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் தினேஷ் குண்டுராவ் கூறியது: 
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியில் இருக்கும் போதே அவர்கள் கட்சியை விட்டுவிலகி பாஜகவுக்கு செல்வதாகக்  கூறப்படுவதில் உண்மையில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர்கூட பாஜகவுக்கு செல்லமாட்டார்கள். அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி மற்றும் சதீஷ் ஜார்கிஹோளியின் பிரச்னையை கட்சி அளவில் தீர்த்துக் கொள்வோம்.  
பாஜகவைச் சேர்ந்த ஒருசில எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர தயாராக இருக்கிறார்கள். அதில் குறிப்பாக 2 பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸில் சேர காத்திருக்கிறார்கள். பாஜகவைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி மஜதவில் சேரப்போவதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்திருக்கிறார்.
பாஜகவில் நிலவும் உள்கட்சிபூசலால் அக்கட்சியில் அதிருப்தி அடைந்துள்ள எம்எல்ஏக்கள், அக்கட்சியில் இருந்து விலக தயாராக இருக்கிறார்கள். எங்கள் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜகவினர் முயற்சித்தால், அவர்கள் கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்க நாங்களும் தயாராக இருக்கிறோம். 
பாஜகவினர் இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடக் கூடாது. அதற்காக நாங்கள் பாஜகவினரை போல நடந்து கொள்ள விரும்பவில்லை. எங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாஜகவினர் அழைத்து தொடர்ந்து கட்சிக்கு இழுக்க முயற்சித்து வருகிறார்கள். பாஜகவினரை போல காங்கிரஸ் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடவிரும்பவில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com