அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா

கர்நாடக அதிமுக சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை(செப்.15) தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கர்நாடக அதிமுக சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை(செப்.15) தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து மாநில அதிமுக செயலாளர் எம்.பி.யுவராஜ் வெளியிட்ட அறிக்கை:
 பெங்களூரு காந்திநகர் ஸ்ரீராமபுரத்தின் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில்  அண்ணாவின் 110-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு அவைத் தலைவர் கே.முனுசாமி தலைமை தாங்குகிறார். 
அண்ணாவின் உருவச்சிலைக்கு கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் அசோக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.  பின்னர், இனிப்பு வழங்குவதோடு ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்குகிறார். விழாவில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com