கர்நாடக திமுக முப்பெரும் விழா

கர்நாடக மாநில திமுகவின் முப்பெரும் விழா பெங்களூரில் ஞாயிறுக்கிழமை நடைபெறுகிறது.

கர்நாடக மாநில திமுகவின் முப்பெரும் விழா பெங்களூரில் ஞாயிறுக்கிழமை நடைபெறுகிறது.
கர்நாடக மாநில திமுக சார்பில் பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை(செப்.16) காலை 9.30 மணிக்கு பெரியார் மற்றும் அண்ணாவின் பிறந்தநாள்கள், திமுக தோன்றியநாள் ஆகியவற்றின் முப்பெரும்விழா கட்சியின் அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில் நடக்கிறது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, அவைத்தலைவர் மொ.பெரியசாமி கட்சியின் இரு வண்ணக் கொடியை ஏற்றுகிறார். திருவள்ளுவர், பெரியார்,  அண்ணா,  கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்களுக்கு கட்சியின் மாநில பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி மாலை அணிவித்துமரியாதை செலுத்துகிறார். 
இந் நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி, இலக்கிய அணி, மகளிர் அணி, தொ.மு.ச.பேரவை நிர்வாகிகள், கட்சியின் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com