அனைவரும் வாக்களிக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார்
By DIN | Published On : 01st April 2019 09:52 AM | Last Updated : 01st April 2019 09:52 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கர்நாடக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தெரிவித்தார்.
பெங்களூரு லால்பாக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அவர் பேசியது: மக்களவைத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது கடமை. நேர்மையாகவும், விதிகளை மீறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தேர்தலில் விதிமுறைகள் மீறப்பட்டால் அதனை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்றார்.
இதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதி சைலேந்திரகுமார் பேசியது:-
பெங்களூரில் அதிக அளவில் கல்வியாளர்களும், அறிவாளிகளும் உள்ளனர். அப்படிவர்கள் தேர்தலில் நேர்மையாகவும், பண ஆசை இல்லாமல் வாக்களிக்க வேண்டும். அண்மைக்காலமாக தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை அதிகரிக்க அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.