கர்நாடகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திமுக ஆதரவு

கர்நாடகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திமுக ஆதரவளிக்கிறது என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திமுக ஆதரவளிக்கிறது என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் தொகுதி உடன்பாடு செய்துகொண்டு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 
இதன்பின்னணியில் கர்நாடகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை திமுக ஆதரிக்க வேண்டுமென்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ்குண்டுராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். 
இதுகுறித்து என்னிடம் விவாதித்த மு.க.ஸ்டாலின், கர்நாடகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன்படி, கர்நாடகத்தில் 21 தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை திமுக ஆதரிக்கும். எல்லா தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக திமுகவினர் வாக்குசேகரிப்பார்கள். மதவாத பாஜகவை மக்களவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம் என்றார்.
பேட்டியின் போது, காங்கிரஸ் முன்னணித்தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம், திமுக மாநில அவைத்தலைவர் மொ.பெரியசாமி, பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி, இளைஞர் அணித்தலைவர் சிவமலை, பொதுக்குழு உறுப்பினர் சிக்பேட் ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com