பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
By DIN | Published On : 04th April 2019 09:25 AM | Last Updated : 04th April 2019 09:25 AM | அ+அ அ- |

மண்டியாவில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மண்டியா குவெம்புநகரைச் சேர்ந்தவர் நேத்ராவதி. இவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளி வந்தவர், நேத்ராவதியிடம் நண்பரை போல நலம் விசாரித்துள்ளார்.
நேத்ராவதியிடம் பேசிக் கொண்டிருந்த போதே அந்த நபர், அவரது கழுத்திலிருந்த ரூ. 2.1 லட்சம் மதிப்புள்ள 70 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து மண்டியா ஊரக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.