மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு 20 சத கமிஷன் அரசாகும்: பிரதமர் மோடி

கர்நாடகத்தை ஆட்சிசெய்துவரும் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு 20 சத கமிஷன் அரசாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கர்நாடகத்தை ஆட்சிசெய்துவரும் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு 20 சத கமிஷன் அரசாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
கொப்பள் மாவட்டத்தின் கங்காவதி நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, அவர் பேசியது:   காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மிஷன், கமிஷன் பெற்றுக்கொள்வது தானே தவிர வேறு அல்ல.  கர்நாடகத்தில் முன்பு இருந்த காங்கிரஸ் அரசு 10 சத கமிஷன் அரசாக இருந்தது.  தற்போதுள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு 20 சத கமிஷன் அரசாக உள்ளது.  மத்திய பிரதேசத்தில் வருமானவரித் துறை நடத்திய சோதனையில் கணக்கில் அடங்கா பணம் கிடைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ், புதிய ஊழலில் ஈடுபட்டுள்ளது.  மத்திய பிரதேச அரசு குழந்தைகள், கர்ப்பிணி பெண்களின் நலனுக்காக ஒதுக்கிய நிதியை காங்கிரஸ் கட்சியினர் வாக்குகளை வாங்குவதற்காக பறித்துக் கொண்டுள்ளனர்.  கடல், நிலம், விண்வெளியில் ஊழல் புரிவதில் சாதனை படைத்துள்ள காங்கிரஸ்,  ஏழைக் குழந்தைகள், பெண்களின் தட்டுகளில் உள்ள உணவையும் பறித்துக்கொண்டுள்ளது.  போஃபர்ஸ், ஹெலிகாப்டர் ஊழலில் ஈடுபட்ட,  குவாத்ரோச்சி உள்ளிட்டோரை காப்பாற்ற அக்கறை செலுத்திய கட்சிதான் காங்கிரஸ்.
எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியலில் ஈடுபடுவதில் அக்கறையோடு செயல்பட்டு வருகின்றன.  சாதாரண மக்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லவே இல்லை.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு தங்களை பற்றியும், குடும்பத்தினரை பற்றியும் தான் கவலை. நாட்டை பாதுகாப்போருக்கு எதிரானவர்கள் தான் இந்த எதிர்க்கட்சியினர். சுய நலத்திற்காக வன்முறை கும்பலோடு கைகோத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு அவமானம் இல்லையா?  ஹம்பி உற்சவம் நடத்துவதற்கு பணம் இல்லாதவர்கள், திப்பு சுல்தான் பிறந்த நாளுக்கு மட்டும் பணம் ஒதுக்குவது எப்படி? காவலாளியான எனது கரத்தைப் பலப்படுத்த மக்கள் அனைவரும் ஆர்வமாக வாக்களிக்க வேண்டும்.  முதல்கட்ட தேர்தல் முடிவில் எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளன.  ஒவ்வொருவரும் தாமரை சின்னத்தில் அளிக்கும் வாக்கு நரேந்திர மோடியின் கணக்கில் வைக்கப்படும்.
எனது தலைமையில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி மலர வேண்டுமென்ற அலை நாடெங்கும் வீசுகிறது.  
முதல்கட்டத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி தான் கிடைக்கும்.  மீண்டும் ஒருமுறை மோடி அரசு வரவேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com