சுடச்சுட

  

  இரண்டாமாண்டு பியூசி தேர்வில் 61.73 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

  By DIN  |   Published on : 16th April 2019 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய 6,71,653 மாணவர்களில் 61.73 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவிகளே சாதனை படைத்துள்ளனர்.
  பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பியூ கல்வி இயக்குநரகத்தில் திங்கள்கிழமை 2018-19-ஆம் ஆண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி தேர்வு முடிவுகளை வெளியிட்டு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உமாசங்கர் கூறியது: மார்ச் 1 முதல் 18-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,013 தேர்வு மையங்களில் நடந்த இரண்டாமாண்டு பியூசி தேர்வில் 6,71,653 மாணவர்கள் தேர்வு எழுதினர்.  மார்ச் 25 முதல் ஏப்.7-ஆம் தேதி வரை பெங்களூரு,மைசூரு,பெலகாவி,தாவணகெரே, மங்களூரு, சிவமொக்கா, தார்வாட், கலபுர்கி ஆகிய 8 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 54 மையங்களில் 22,746 விரிவுரையாளர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
  தேர்ச்சி விகிதம்: 4,14,587 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சராசரியாக 61.73 சதவீதமாகும். வழக்கம்போல மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதிய தேர்வர்கள் 5,58,399 பேரில் 3,83,521(68.68%) மாணவர்களும், மறு தேர்வர்கள் 85,585பேரில் 23,425(27.37%)மாணவர்களும், தனித்தேர்வர்கள் 27,669 பேரில் 7,841(27.62%) மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். 
  தேர்வெழுதிய 3,37,668மாணவர்களில் 1,86,690 பேரும்(55.29%), 3,33,985 மாணவிகளில் 2,27,897 பேரும்(68.24%) வெற்றி பெற்றுள்ளனர். நகரப்பகுதியை சேர்ந்த 5,22,391 மாணவர்களில் 3,20,657 பேரும்(61.38%), கிராமப் பகுதியை சேர்ந்த 1,49,262 மாணவர்களில் 93,860 பேரும்(62.88%) தேர்ச்சி அடைந்துள்ளனர். 
  மாணவிகள் சாதனை: கலைப்பிரிவை சேர்ந்த 2,00,022 பேரில் 1,01,073(50.53%) மாணவர்களும், வணிகப்பிரிவை சேர்ந்த 2,53,865 பேரில் 1,68,531(66.39%)மாணவர்களும், அறிவியல் பிரிவை சேர்ந்த 2,17,766 பேரில் 1,44,983(66.58%)மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 
  தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 1,19,865 மாணவர்களில் 62,290(51.97%)பேரும், பழங்குடியின பிரிவை சேர்ந்த 42,490 மாணவர்களில் 22,665(53.34%)பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கன்னடபயிற்றுமொழியில் தேர்வெழுதிய 2,94,002 மாணவர்களில் 1,61,923(55.08%)பேரும், ஆங்கிலபயிற்றுமொழியில் தேர்வெழுதிய 3,77,651 பேரில் 2,52,664(66.90%) மாணவர்களும் தேர்வடைந்துள்ளனர். 
  பார்வைகுறைபாடுள்ள மாணவர்கள் 285 பேரில் 217 மாணவர்களும்,காதுகேளாத மாணவர்கள் 198 பேரில் 106 மாணவர்களும், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் 358 பேரில் 250 மாணவர்களும், கற்றலில் குறைபாடுள்ள 391 பேரில் 236 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  நூற்றுக்கு நூறு சாதனை
  85 சதவீதத்திற்கும் அதிகமாக (சிறப்பிடம்) 54,823 பேரும், 60 சதவீதத்திற்கும் மேல் 85 சதவீதத்திற்கும் குறைவாக(முதல்வகுப்பு) 2,27,301 பேரும், 50 சதவீதத்திற்கும் மேல் 60 சதவீதத்திற்கும் குறைவாக(இரண்டாம் வகுப்பு) 80,357 பேரும், 35 சதவீதத்திற்கும் மேல் 50 சதவீதத்திற்கும் மேல் 50 சதவீதத்திற்கும் குறைவாக(மூன்றாம் வகுப்பு)52,106 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். 
  கன்னட பாடத்தில் 161, சம்ஸ்கிருதத்தில் 852, ஹிந்தியில் 35, சிறப்பு கன்னடத்தில் 7, வரலாறில் 155, பொருளாதாரத்தில் 303, தருக்கவியலில் 23, புவியியலில் 757, இந்துஸ்தானி இசையில் 1, வணிகவிவகாரங்களில் 955, சமூகவியலில் 58, அரசியல் அறிவியலில் 117, உருதுவில் 2, கணக்குப்பதிவியலில் 1,939, புள்ளியியலில் 977, உளவியலில் 19, இயற்பியலில் 7, வேதியியலில் 754, கணிதத்தில் 2,447, உயிரியலில் 128, மின்னணுவியலில் 93, கணினி அறிவியலில் 1,546, கல்வியில் 314, அடிப்படை கணிதத்தில் 357,மலையாளத்தில் 1 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று வெற்றி அடைந்துள்ளனர். 
  அரசு பியூ கல்லூரிகளைச் சேர்ந்த 1,41,975 மாணவர்கள் தேர்வெழுதியதில் 86,329(60.80%)பேரும், அரசு மானியம் பெறும் பியூ கல்லூரிகளைச் சேர்ந்த 1,04,251 மாணவர்கள் தேர்வெழுதியதில் 68,155(65.37%) பேரும், அரசு மானியம் பெறாத பியூ கல்லூரிகளைச் சேர்ந்த 2,55,171 மாணவர்கள் தேர்வெழுதியதில் 1,87,916(73.64%)பேரும், மாநகராட்சி பியூ கல்லூரிகளைச் சேர்ந்த 1,861 மாணவர்கள் தேர்வெழுதியதில் 1,165(62.60%)பேரும், பிரிக்கப்பட்ட பியூ கல்லூரிகளைச் சேர்ந்த 55,141 மாணவர்கள் தேர்வெழுதியதில் 39,956(72.46%)பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 
  15 அரசு பியூ கல்லூரி, 1 அரசு மானியம்பெறும் பியூ கல்லூரி, 63 அரசு மானியம்பெறாத பியூ கல்லூரி, 1 பிரிக்கப்பட்ட பியூ கல்லூரி உள்பட 80 கல்லூரிகளில் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெற்றுள்ளன. 3 அரசு பியூ கல்லூரி, 1 அரசு மானியம் பெறும் பியூ கல்லூரி, 94 அரசு மானியம்பெறாத பியூ கல்லூரி உள்பட 98 கல்லூரிகள் பூஜ்யம் தேர்ச்சி அடைந்துள்ளன. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும், ஏப்.16-ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்லூரிகளில் வெளியிடப்படும். மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றார்.  பியூ கல்வித் துறை இயக்குநர் சி.ஷிக்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


  மங்களூரு மாணவி முதலிடம்
  இரண்டாமாண்டு பியூசி தேர்வில் மங்களூரு மாணவி ஒல்விடா அஞ்சில்லா டிசெளஜா மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
  2018-19-ஆம் ஆண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி பொதுத்தேர்வில் வழக்கம்போல மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மங்களூரு மாணவி ஒல்விடா அஞ்சில்லா டிசெளஜா 600-க்கு 596 மதிப்பெண்கள் மாநில அளவில் மூன்று பாடப்பிரிவுகளிலும் முதலிடம் பெற்று
  வெற்றிபெற்றுள்ளார்.
  அறிவியல் பாடப்பிரிவு
  அறிவியல் பாடப்பிரிவில் மங்களூரில் உள்ள குமரன்ஸ் பியூ கல்லூரி மாணவர் எஸ்.ரஜத் காஷ்யப் 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் 95, சம்ஸ்கிருதத்தில் 99, இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 
  பெங்களூரில் உள்ள வித்யாமந்திர் பியூ கல்லூரி மாணவி கே.திவ்யா, 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார். இவர் ஆங்கிலத்தில் 96, சம்ஸ்கிருதத்தில் 100, இயற்பியலில் 98, வேதியியல், கணிதப் பாடங்களில் தலா 100, உயிரியலில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பெங்களூருவை சேர்ந்த ஆர்வி பியூ கல்லூரி மாணவி பிரியாநாயக், 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார். 
  இவர் ஆங்கிலத்தில் 96, சம்ஸ்கிருதத்தில் 99, இயற்பியல், வேதியியல் பாடங்களில் தலா 99, கணிதம், கணினி அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். உடுப்பி எஸ்.ஆர். பியூ கல்லூரி மாணவி ரஹீசா, பெங்களூரு மாஸ்டர்ஸ் பியூ கல்லூரி மாணவர் டி.நிகேதன்கெளடா, பெங்களூரு விவேகானந்தா பியூ கல்லூரி மாணவி ஜாக்ரதிநாயக், உடுப்பி மகாத்மாகாந்தி பியூ கல்லூரி மாணவி ஸ்வாதி ஆகியோர் 600-க்கு 592 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
  வணிகப் பாடப்பிரிவு
  வணிகப் பாடப்பிரிவில் தென்கன்னட மாவட்டத்தின் மங்களூரு அருகேயுள்ள மூடபிதரியை சேர்ந்த ஆல்வாஸ் பியூ கல்லூரி மாணவி ஒல்விடா அஞ்சில்லா டிஜைசா 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் 98, ஹிந்தியில் 98, வணிகப்படிப்பு, கணக்குப்பதிவியல், புள்ளியியல், அடிப்படை கணிதத்தில் தலா 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
  தென் கன்னட மாவட்டத்தின் சத்தியசாய்விகாரை சேர்ந்த சத்தியசாய் லோகேசேவா பியூ கல்லூரி மாணவர் ஸ்ரீகிருஷ்ணா சர்மா 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் 96, சம்ஸ்கிருதத்தில் 100, வணிகபடிப்பு, கணக்குப்பதிவியல், புள்ளியியல், அடிப்படை கணிதத்தில் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வடகன்னட மாவட்டத்தின் கனரா பியூ கல்லூரி மாணவி ஷேஷ்ரயோ செனாய்  600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார். 
  தென்கன்னட மாவட்டத்தின் புத்தூரின் புனித பிலோமினாஸ் பியூ கல்லூரி மாணவர் பி.ஸ்வஸ்திக், பெங்களூரு கிறைஸ்ட் பியூ கல்லூரி மாணவர் கெளதம் ரதி, பெங்களூரு கடம்பி பியூ கல்லூரி மாணவி கே.வைஷ்ணவி, தும்கூரின் வித்யாவாஹினி பியூ கல்லூரி மாணவி பிரக்ஞா சதீஷ், பெங்களூரு ஜெயின் பியூ கல்லூரி மாணவர் பீமிரெட்டி, பெங்களூரு கிறைஸ்ட் பியூ கல்லூரி மாணவர் பிரணவ் சாஸ்திரி, பெங்களூரு மகாவீர் ஜெயின் பியூ கல்லூரி மாணவி ஷேராவந்தி ஜெயபால் ஆகிய 7 மாணவர்களும் 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 
  கலைப்பாடப்பிரிவு: கலைப்பாடப்பிரிவில் பெல்லாரி மாவட்டத்தின் கொத்தூரின் இந்து பியூ கல்லூரி மாணவி குசுமா உஜ்ஜினி 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். பெல்லாரி மாவட்டத்தின் கொத்தூரின் இந்து பியூ கல்லூரி மாணவர் ஹொசமணி சந்திரப்பா, மாணவர் நாகராஜ், மாணவர் எஸ்.ஒமேஷா ஆகிய 3 மாணவர்களும் 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும்; பெல்லாரி மாவட்டத்தின் கொத்தூரின் இந்து பியூ கல்லூரி மாணவர் கே.ஜி.சச்சின், எச்.சுரேஷா, தாவணகெரே மாணவர் பரிகரா சிவக்குமாரா ஆகிய 3 மாணவர்களும் 600-க்கு 589 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று சாதனை
  படைத்துள்ளனர்.

  தமிழ் மொழிப் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள்
  இரண்டாமாண்டு பியூசி தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தில் 100-க்கு 96 மதிப்பெண்களை பெற்று பெங்களூரு, அல்சூரில் உள்ள மாநகராட்சி மகளிர் பியூ கல்லூரி மாணவி எஸ்.ஜோதிகா சிறப்பிடம் பெற்றுள்ளார். 
  தமிழ் மொழிப் பாடத்தில் சிறப்பிடம் பிடித்த மாணவ,மாணவிகள் வருமாறு: பெங்களூரு ஸ்ரீராமபுரத்திலுள்ள ஜிவிஎஸ் பெருமாள் பியூ கல்லூரி மாணவி எஸ்.திவ்யா, பெங்களூரு ஆர்பிஏஎன்எம்எஸ் பியூ கல்லூரி மாணவி வி.திவ்யலட்சுமி 100-க்கு தலா 95, பெங்களூரு சாஸ்திரி நினைவு பியூ கல்லூரி மாணவி எஸ்.எஃப்.ஜஸ்மீன் பர்வீன், கோலார் மாவட்டத்தின் கிறைஸ்ட் பியூ கல்லூரி மாணவர் ஜே.ஃபெலிக்ஸ் ஜான் 100-க்கு 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
  இதேபோல பெங்களூரு பிரைட்வே பியூ கல்லூரி மாணவி எம்.சந்தியா, கோலார் மாவட்டத்தின் கிறைஸ்ட் பியூ கல்லூரி மாணவி ஆர்.ரமாஸ்ரீ, பெங்களூரு ஆர்பிஏஎன்எம்எஸ் பியூ கல்லூரி மாணவர் வி.அத்வைத், பெங்களூரு டீச்சர்ஸ் பியூ கல்லூரி ஆர்.ஆர்.அஸ்வினி, பெங்களூரு பிரைட்வே பியூ கல்லூரி மாணவி பி.பவ்யா, பெங்களூரு மாநகராட்சி பியூ கல்லூரி மாணவி சி.திலோத்தி ஆகியோர் 100-க்கு 92, பெங்களூரு மாநகராட்சி பியூ கல்லூரி மாணவி ஏ.காயத்ரி, கோலார் மாவட்டத்தின் கிறைஸ்ட் பியூ கல்லூரி மாணவர் வி.புருஷோத்தமன், மாணவி ஆர்.என்.ரூபிகா ஆகியோர் 100-க்கு 91 மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai