சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல்: இன்று மாலையுடன் பகிரங்க பிரசாரம் ஓய்கிறது

  By DIN  |   Published on : 16th April 2019 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
  17-ஆவது மக்களவைக்கு கர்நாடகத்தில் ஏப்.18, 23-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ்-மஜத கூட்டணி, பாஜக, எஸ்யூசிஐ(சி)உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்ளடக்கிய 523 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
  முதல்கட்டத்தில் 241 பேரும், இரண்டாம்கட்டத்தில் 282 பேரும் போட்டியிடுகிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி மற்றும் பாஜக இடையே இருமுனை போட்டி நிலவுகிறது. 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளிலும், மஜத 7 தொகுதிகளிலும், பாஜக 27 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த இருவாரங்களாக முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். 
  காங்கிரஸ்-மஜத கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி, முன்னாள் முதல்வர் சித்தராமையா,துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோரும், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்துவருகிறார்கள். முதல்கட்டமாக உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுர்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ்நகர், ஊரக பெங்களூரு, வடபெங்களூரு, மத்திய பெங்களூரு, தென் பெங்களூரு, சிக்பளாப்பூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளில் ஏப்.18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தொகுதிகளில் திறந்தவேனில் பிரசாரம் செய்வது, வீதிவீதியாக ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்வதுபோன்ற பகிரங்க பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 
  இதனால் செவ்வாய்க்கிழமை முக்கிய தலைவர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு மாலை 6 மணிவரை தீவிர பிரசாரத்தில் ஈடுபடவிருக்கிறார்கள். மாலை 6 மணிக்குபிறகு வீடுவீடாக சென்றுவாக்குசேகரிக்க அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன. முதல்கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai