சுடச்சுட

  

  பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
  மண்டியா பாண்டுவபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மஜத வேட்பாளர் நிகிலை ஆதரித்து அவர் பேசியது: மத்தியில் பிரதமர் மோடி மோசமான ஆட்சியை நடத்தி வருகிறார். பாஜக ஆட்சியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிபிஐ, வருமான வரித் துறையினரை தங்கள் கைப்பாவையாக மத்திய அரசு ஆட்டுவித்து வருகிறது.
  நாட்டில் மோடியைவிட சிறந்த தலைவர்கள் ஏராளமாக உள்ளனர். பிரதமர் மோடி ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மத்தியில் பாரபட்சமான ஆட்சி நடைபெற்று வருகிறது. ரஃபேல் விவகாரத்திலும் தவறு நடந்துள்ளது. பாஜக ஆட்சியால் கர்நாடகத்துக்கு எந்த பயனுமில்லை. 
  பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும். இதனால்தான் மக்களவைத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக படுதோல்வி அடையும். மத்திய அரசின் உத்தரவுபடி தேர்தல் ஆணையம் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, முதல்வர் குமாரசாமி, மஜத வேட்பாளர் நிகில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai