Enable Javscript for better performance
வாக்குப் பெட்டிகளுடன் செல்லும் வாகனங்களில் கண்காணிப்பு சாதனம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்குப் பெட்டிகளுடன் செல்லும் வாகனங்களில் கண்காணிப்பு சாதனம்

    By DIN  |   Published on : 16th April 2019 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் வாகனங்களில் கண்காணிப்பு சாதனம் பொருத்தத் திட்டமிட்டுள்ளதாக பெங்களூரு ஊரக மாவட்ட ஆட்சியர் விஜயசங்கர் தெரிவித்தார்.
    இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெங்களூரு உள்பட மாநிலத்தின் 14 தொகுதிகளில் ஏப். 18-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெங்களூரு ஊரகத் தொகுதியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக வாக்குச்சாவடிகளில் அனைத்து ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் பணி மேற்கொள்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பெட்டிகளைக் கொண்டு செல்லும் வாகனங்களில் கண்காணிப்பு சாதனம் பொருத்த திட்டமிட்டுள்ளோம். தேர்தலை நேர்மையாகவும், சிறப்பாக நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai