இரண்டாமாண்டு பியூசி தேர்வு: மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கான விடைத்தாள் நகல் பெற

இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கான விடைத்தாள் நகல் பெற ஏப்.17 முதல் 29-ஆம் தேதிக்குள்ளும், மறு மதிப்பீடு மற்றும் மறுக்கூட்டலுக்கு ஏப்.29 முதல் மே 8-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம். 
நகல் விடைத்தாள்களை ஏப்.27 முதல் மே 6-ஆம் தேதிக்குள் பியூ கல்வித் துறை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள் நகல்பெற ஒரு பாடத்துக்கு ரூ.530, மறு மதிப்பீடுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.1,670, மறுக்கூட்டலுக்கு கட்டணம் எதுவுமில்லை. விடைத்தாள் நகல், மறு மதிப்பீடு,
மறுக்கூட்டலுக்கான விண்ணப்பங்களை எல்லா பியூ கல்லூரிகளில் மற்றும்  ‌w‌w‌w.‌p‌u‌e.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல், மறு மதிப்பீடு, மறுக்கூட்டல் முடிவுகள் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படுகிறது.
புகைப்படங்களை திருத்தவாய்ப்பு
இரண்டாமாண்டு மாணவர்களின் விண்ணப்பங்களில் புகைப்படங்கள் ஏதாவது தவறாக பதிந்திருந்தால், அதை திருத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. இதற்காக w‌w‌w.‌p‌u‌e.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளம் ஏப்.16 முதல் ஏப்.25-ஆம் தேதிவரை திறந்திருக்கும். இந்தகாலக்கட்டத்தில் மாணவர்கள் புகைப்படங்களை திருத்தியமைத்துக் கொள்ளலாம்.
துணைத்தேர்வு
இரண்டாமாண்டு பியூசி துணைத்தேர்வு ஜூன் முதல் வாரத்தில் நடத்த பியூ கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இத்தேர்வுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஒரு பாடத்துக்கு ரூ.140, இரண்டு பாடங்களுக்கு ரூ.270, மூன்று பாடங்களுக்கு மேல் ரூ.400 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
தமிழ்ப்பாடத்தில் தேர்ச்சி 
இரண்டாமாண்டு பியூசி தேர்வில் 2018-19-ஆம் கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் முதல்மொழி தமிழ்ப் பாடத்தில் 295 மாணவர்கள்(புதிய மாணவர்கள்-286, மறுத்தேர்வர்கள்-2, தனித்தேர்வர்கள்-7)தேர்வு எழுதினர். இதில் 275 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.22 சதவிகித தேர்ச்சியாகும். 2013-14-இல் 407 பேர் தேர்வெழுதியதில் 406(99.75%) பேரும், 2014-15-இல் 421 பேர் தேர்வெழுதியதில் 348(82.66%)மாணவர்களும், 2015-16-இல் 371 மாணவர்கள் தேர்வெழுதியதில் 351(94.61%) மாணவர்களும், 2016-17-இல் 262 மாணவர்கள் தேர்வெழுதியதில் 262(92.90%) மாணவர்களும்  வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆண்டுதோறும் தமிழ் மொழிப்பாடத்தை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15 ஆண்டில் தேர்ச்சி விகிதம்
ஆண்டு         தேர்ச்சிவிகிதம்
1. 2005    52.77
2. 2006    53.97
3. 2007    50.70
4. 2008    41.31
5. 2009    43.07
6. 2010    49.27
7. 2011    48.93
8. 2012    57.03
9. 2013    59.36
10.2014    60.47
11. 2015    60.54
12. 2016    57.20
13. 2017    52.38
14. 2018    59.56
15. 2019    61.73

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
மாவட்டம்           தேர்ச்சி விகிதம்
1. உடுப்பி    92.20
2. தென்கன்னடம்    90.91
3. குடகு    83.31
4. வடகன்னடம்    79.59
5. சிக்மகளூரு    76.42
6. ஹாசன்    75.19
7. பாகல்கோட்    74.26
8. தென் பெங்களூரு    74.25
9. சிவமொக்கா    73.54
10. ஊரக பெங்களூரு    72.91
11. வடபெங்களூரு    72.68
12. சாமராஜ்நகர்    72.67
13. சிக்பளாப்பூர்    70.11
14. விஜயபுரா    68.55
15. மைசூரு    68.55
16. ஹாவேரி    68.40
17. தும்கூரு    65.81
18. கோலார்    65.19
19. பெல்லாரி    64.87
20. கொப்பள்    63.15
21. மண்டியா    63.08
22. தாவணகெரே    62.53
23. தார்வாட்    62.49
24. ராமநகரம்    62.08
25. சிக்கோடி    60.86
26. கதக்    57.76
27. ராய்ச்சூரு    56.73
28.பெலகாவி    56.18
29. கலபுர்கி    56.09
30. பீதர்    55.78
31. யாதகிரி    53.02
32. சித்ரதுர்கா    51.42

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com