பிரதமர் மோடி தொழிலாளர்களை புறக்கணிக்கிறார்: எஸ்.எஸ்.பிரகாசம்

பிரதமர் மோடி தொழிலாளர்களைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தொழிலாளர் பிரிவுத் தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தொழிலாளர்களைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தொழிலாளர் பிரிவுத் தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தேசிய அளவில் 62 சதவீதம் அமைப்புச்சாரா தொழிலாளர்களும், 8 சதம் அமைப்புச்சார் தொழிலாளர்கள்
உள்ளனர். 
ஆனால் கடந்த 5 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியிலிருந்த பிரதமர் மோடி, தொழிலாளர்கள் நலனுக்கான எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. கர்நாடகத்தில் முதல்வராக சித்தராமையா இருந்த போது, புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிக்கை அளித்தோம். அதனை மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அந்த திட்டத்தை பாராட்டி பிரதமர் மோடி, அது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 
அண்மையில் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தொழிலாளர்களுக்கான எந்த திட்டத்தையும், வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை. பிரதமர் மோடி தொடர்ந்து தொழிலாளர்களை புறக்கணித்து வருகிறார். அவருக்கு தேர்தலில் தொழிலாளர்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்.
மேலும் கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் காங்கிரஸ், மஜத கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளிலும், மஜத 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. மாநிலத்தில் பெங்களூரு, மங்களூரு, மைசூரு, சிக்மகளூரு, சிவமொக்கா உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றி நிர்ணயிக்கும் நிலையில் தமிழர்கள் உள்ளனர். அவர்களை அனைத்து கட்சியினரும் அரவணைத்துச் செல்ல
வேண்டும். 
அரவணைக்காத கட்சிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். தேசிய அளவில் 250 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com