பெங்களூரின் வளர்ச்சிக்கு காங்கிரஸை ஆதரிக்க வேண்டும்: அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ்

பெங்களூரின் வளர்ச்சிக்கு காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்று தொழில் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.

பெங்களூரின் வளர்ச்சிக்கு காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்று தொழில் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை சர்வக்ஞர் தொகுதியில் மத்திய பெங்களூரு காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு அவர் பேசியது: 
கர்நாடகத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சியிலும், தற்போது உள்ள கூட்டணி ஆட்சியிலும் பெங்களூரு சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. பாஜக ஆட்சியில் பெங்களூரு குப்பை நகரமென்ற பெயர் பெற்றதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்ற பெயர் பெற்ற பெங்களூரு, உயிரித் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் காங்கிரஸ் ஆட்சியில் சிறந்து விளங்கியது யாரும் மறக்கவும் முடியாது. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் பெங்களூரு, மேலும் சிறக்க காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும். மத்திய பெங்களூரு காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத் பெங்களூரின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com