சுடச்சுட

  

  கனரா வங்கியின் புதிய மேலாண் இயக்குநராக ஆர்.ஏ.சங்கரநாராயணன் பதவியேற்றுக் கொண்டார்.
  கனரா வங்கியின் புதிய மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட  ஆர்.ஏ.சங்கரநாராயணன் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். எம்பிஏ(நிதி)படித்துள்ள சங்கரநாராயணன், 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் விஜயா வங்கியின் மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்தார். 
  1983-ஆம் ஆண்டு பேங்க் ஆஃப் இந்தியாவில் நேரடி பணி நியமன அதிகாரியாக பணியில் சேர்ந்த சங்கரநாராயணன், அந்த வங்கியின் பல்வேறு கிளைகள், மண்டலங்களில் சேவையாற்றிய அனுபவம் பெற்றவர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கருவூலம், பன்னாட்டு வங்கியியல், பெருநிறுவன கடன, பங்குச்சந்தை மேலாண்மை, சில்லறை வர்த்தகம், சந்தைப்படுத்தல், கடன் வசூல், மனித வளம் போன்ற பிரிவுகளில் பணியாற்றியுள்ளார் என்று கனராவங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில்
  குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai