சுடச்சுட

  

  மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் பாஜக தோல்வி: சித்தராமையா

  By DIN  |   Published on : 17th April 2019 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் பாஜக தோல்வி அடைந்துள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தரமையா தெரிவித்தார்.
  மைசூரு மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியது: காங்கிரஸ் ஆட்சியில் நான் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு கூறமுடியும். அதேபோல மத்தியில் பாஜக ஆட்சியில் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு மக்கள் முன் வைக்க அக்கட்சியினர் தயாரா? என்பதனை கூறவேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள், கூட்டணி அரசிலும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. 
  ஆனால், பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பாஜக அரசு தலித் மக்களுக்கு ஆதரவாக இல்லை. கர்நாடகத்தில் பாஜக எங்களின் முக்கிய எதிரி. அந்த கட்சியை தோற்கடிப்பதே கூட்டணி கட்சிகளின் நோக்கம். எனவே கூட்டணி கட்சிகளில் ஊழியர்கள், தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு, கூட்டணி வேட்பாளர்களை வெற்றியடைச் செய்ய வேண்டும். 
  காவலர் என்று கூறும் பிரதமர் மோடி, விவசாயிகள், தலித் மக்கள், ஏழைகள், ராணுவ வீரர்களை ஏன் பாதுகாக்க முடியவில்லை என்பதனை மக்களிடம் விளக்க வேண்டும். பாஜக ஆட்சியில் 78 சதவீதம் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ. 300 ஆக இருந்த சமையல் எரிவாயு ரூ. 800ஐ தொட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இதனால், பாஜக அரசு தேவையா என்பதனை மக்கள் முடிவு செய்ய வேண்டும். மேலும், மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது என்றார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai