சுடச்சுட

  

  லிங்காயத்து விவகாரத்தில் காங்கிரஸின் சதி அம்பலமாகியுள்ளது

  By DIN  |   Published on : 17th April 2019 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  லிங்காயத்து விவகாரத்தில் காங்கிரஸின் சதி அம்பலமாகியுள்ளதாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
  இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: லிங்காயத்து மற்றும் வீரசைவர் விவகாரம் தொடர்பாக தற்போது அமைச்சராக இருக்கும் எம்.பி.பாட்டீல், அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாக, கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க காங்கிரஸ் தீட்டிய சதி பகிரங்கமாகியுள்ளது. 
  இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை சோனியாகாந்தி வழிகாட்டியுள்ளதாக தெரிகிறது. இந்த சதியை செயல்படுத்த பன்னாட்டு அமைப்பின் உதவியை நாடியிருப்பது கவலை அளிக்கிறது. தேசிய அளவிலும் இதே போன்றதொரு நிலைமைதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
  இனிமேலாவது சமுதாயத்தை பிளவுபடுத்தும் வேலையில் இறங்காமல், மக்களின் நலனுக்காக மனசாட்சியின்படி நடக்குமாறு காங்கிரஸ் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். வீரசைவ லிங்காயத்து சமுதாயம் உள்ளிட்ட கர்நாடக மக்கள் காங்கிரஸின் சதித் திட்டத்துக்கு இணங்கவில்லை. காங்கிரஸின் சதிக்கு என்றைக்கும் கர்நாடக மக்கள் பலியாகமாட்டார்கள். இத்தனை சதிகளுக்கு இடையிலும் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்கட்சியாக 104 இடங்களில் வென்றது. அதேபோல, மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸை தோற்கடித்து 22 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்று எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai