Enable Javscript for better performance
14 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது- Dinamani

சுடச்சுட

    

    14 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

    By DIN  |   Published on : 21st April 2019 05:56 AM  |   அ+அ அ-   |    |  


    கர்நாடகத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கான  பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை(ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
    17ஆவது மக்களவைக்கு கர்நாடகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 18இல் தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக  23ஆம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.
    காங்கிரஸ்மஜத கூட்டணி, பாஜக, எஸ்யூசிஐ(சி)உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள்,  சுயேச்சைகள் உள்ளடக்கிய 523 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்கட்டத்தில் 241 பேரும், இரண்டாம்கட்டத்தில் 282 பேரும் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ்மஜத கூட்டணி,  பாஜக இடையே இருமுனை போட்டி நிலவுகிறது. 28 தொகுதிகளில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், மஜத 7 தொகுதிகளிலும், பாஜக 27 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 
    இதையடுத்து, ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இக்கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சிலவாரங்களாக முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். 
    காங்கிரஸ்மஜத கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் சித்தராமையா,துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ்குண்டுராவ், மஜத தேசியத்தலைவரும், முன்னாள்பிரதமருமான எச்.டி.தேவெகெளடா, முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோரும், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் உள்ளிட்டோரும்பிரசாரம் செய்தனர். 
    இரண்டாம்கட்டமாக சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, கலபுர்கி, ராய்ச்சூரு, பீதர், கொப்பள், பெல்லாரி, ஹாவேரி, தார்வாட், வடகன்னடம், தாவணகெரே, சிவமொக்கா ஆகிய 14 தொகுதிகளில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொகுதிகளில் திறந்தவேனில் பிரசாரம் செய்வது, வீதிவீதியாக ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்வதுபோன்ற பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 
    இதனால் ஞாயிற்றுக்கிழமை முக்கிய தலைவர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு மாலை 6 மணிவரை தீவிர பிரசாரத்தில் ஈடுபடவிருக்கிறார்கள். 
    தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன.  இரண்டாம்கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp