மஜதகாங்கிரஸ் கூட்டணி அரசு விரைவில் கவிழும்: சதானந்த கெளடா
By DIN | Published On : 21st April 2019 05:53 AM | Last Updated : 21st April 2019 05:53 AM | அ+அ அ- |

கர்நாடகத்தில் மஜதகாங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கெளடா
தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரை பக்கத்தில் சனிக்கிழமை கூறியிருந்ததாவது:
தான் மீண்டும் முதல்வரானால் 10கிலோ அரிசி வழங்குவதாக, முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியிருக்கிறார். மஜதகாங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்வதற்கான அறிகுறியாக இது தென்படுகிறது. முதல்வராக சித்தராமையா சதி திட்டம் வகுத்துள்ளது தெளிவாகிறது.
கூட்டணி அரசின் வீழ்ச்சிக்கு இது முன்னறிவிப்பாகும். மண்டியா, ஹாசன், தும்கூரு மக்களவைத் தொகுதிகளில் மஜத வேட்பாளர்கள் தோற்கப் போகும் தேர்தல் முடிவை முன்கூட்டியே அறிந்திருப்பதால், சித்தராமையா அப்படி கூறியிருக்கலாம் என்று சதானந்த கௌடா தெரிவித்துள்ளார்.