Enable Javscript for better performance
தேர்தல் பணியாற்றியோர் அச்சுறுத்தப்படுகின்றனர்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தேர்தல் பணியாற்றியோர் அச்சுறுத்தப்படுகின்றனர்

    By DIN  |   Published On : 22nd April 2019 07:53 AM  |   Last Updated : 22nd April 2019 07:53 AM  |  அ+அ அ-  |  

    மண்டியா மக்களவைத் தொகுதியில் தனக்கு ஆதரவாகத் தேர்தல் பணியாற்றியவர்கள்  அச்சுறுத்தப்படுகின்றனர் என்று சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதா தெரிவித்தார்.
    மண்டியாவில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
    சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு பலரும் ஆதரவு தெரிவித்து பணியாற்றினர்.  ஆதரவாகப் பணியாற்றிவர்கள் அடையாளம் காணப்பட்டு, அச்சுறுத்தப்படுகின்றனர்.  அவர்களுக்கு உரிய பாதுகாப்பை காவல் துறை அளிக்க வேண்டும். ஆதரவு அளித்தவர்கள் பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க மாட்டேன்.  அவர்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும்  இருப்பேன். 
    "சுமலதாவை ஆதரித்ததற்காக, திரைப்படக் கலைஞர்கள் பிராயசித்தம் தேட வேண்டும்'  என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதற்கு அர்த்தம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும்.  அவர் யாரையோ மிரட்டிப் பார்க்க முனைந்துள்ளார். மண்டியா மாவட்ட மக்கள் அளித்த ஊக்கத்தால், மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டேன். எனக்கு அரசியல் தேவையில்லை. மக்களுக்கு சேவை செய்யவே தேர்தலில் களத்தில் இறங்கினேன். தேர்தலுக்குப் பிறகு சிங்கப்பூர் சென்றுவிடுவேன் என்று பொய்யான பிரசாரம் செய்தனர். எனக்கு இனி மண்டியாதான் சிங்கப்பூர் என்பதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மே 29-இல் நடிகர் அம்பரீஷின் பிறந்த நாளை மண்டியாவில் கொண்டாட முடிவு செய்துள்ளேன் என்றார் சுமலதா.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp